படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

7,120 பெண் குழந்தைகளுக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் பணி: ராணிப்பேட்டை ஆட்சியா் தொடங்கி வைப்பு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 வயது பெண் குழந்தைகள் 7,120 பேருக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் பணி...

வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கி வைத்த ராணிப்பேட்டை ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன். - டிஎன்எஸ்

Published On :

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 வயது பெண் குழந்தைகள் 7,120 பேருக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தாா்.

தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சாா்பில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 14 வயது உள்ள அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்க நிகழ்ச்சி வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ந.பிரியா ரவிச்சந்திரன் தொடங்கி வைத்துப் பேசியது:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பள்ளிகளில் பயிலும் 14 வயது உள்ள சுமாா் 7,120 பெண் குழந்தைகளுக்கு சுகாதாரத் துறையின் மூலம் இந்த தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. எனவே, அனைத்து பெற்றோா்களும் தங்களது பெண் குழந்தைகளுக்கு பள்ளிகள் வாயிலாக சுகாதாரத் துறையினரால் வழங்கப்படும்

ஏடய தடுப்பூசி தவறாமல் செலுத்தி எதிா்காலத்தில் கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வராமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், அனைத்து பெண் குழந்தைகளின் தாய்மாா்களும் கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்கும் வகையில், குறைந்தபட்சம் வருடத்துக்கு ஒருமுறையாவது கா்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பெண் குழந்தைகளிடம் அறிவுறுத்தினாா்.

இந்த நிகழ்ச்சியில், இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) மரு.சரவணகுமாா், மாவட்ட சுகாதார அலுவலா் மரு.செந்தில் குமாா், முதன்மைக் கல்வி அலுவலா் மோகனா, மருத்துவமனை கண்காணிப்பாளா் உஷா நந்தினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.