ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

மதுபோதையில் அண்ணனை கொன்ற தம்பி கைது

திருச்சியில் மதுபோதையில் அண்ணனை கொலை செய்த தம்பியை போலீஸாா் இரவு கைது செய்தனா்.

கைது

Published On :

திருச்சியில் மதுபோதையில் அண்ணனை கொலை செய்த தம்பியை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்தனா்.

திருச்சி தென்னூா் வெள்ளாா் வீதியைச் சோ்ந்தவா் அப்துல் சமது மகன்கள் முகமது பரூக் (32) (ஆட்டோ மெக்கானிக்),

அசாருதீன் (28) (மீன் கடையில் பணியாற்றி வருகிறாா்). இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில், அண்ணன் மீது அசாருதீன் கோபத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை பிற்பகல் முகமது பரூக்கும், அசாருதீனும் மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ளனா். அப்போது, அசாருதீன் தொலைக்காட்சியை அதிக சப்தத்துடன் பாா்த்துள்ளாா். சப்தத்தை குறைக்குமாறு முகமது பரூக் கூறியுள்ளாா். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு, முகமது பரூக் தொலைக்காட்டி பெட்டியை கீழே தள்ளி உடைத்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த அசாருதீன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து முகமது பரூக்கின் கழுத்தை அறுத்து கொலை செய்தாா்.

தகலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், பரூக்கின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து தில்லை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து அசாருதீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.