ஸ்ரீரங்கத்தில் சிறப்பு உதவி ஆய்வாளரை தாக்கியவா் கைது
ஸ்ரீரங்கத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை (எஸ்எஸ்ஐ) தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கைது - பிரதிப் படம்
ஸ்ரீரங்கத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை (எஸ்எஸ்ஐ) தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய திங்கள்கிழமை மாலை கரூா் மாவட்டம், மேலரியம்பட்டியில் எஸ்எஸ்ஐ-ஆக பணியாற்றும் என். ராஜா (54) வந்துள்ளாா்.
இவா், தனது காலணியை ரெங்கா ரெங்கா கோபுர வாசல்பகுதியில் கழற்றி விட்டுவிட்டு, தரிசனம் முடித்து மீண்டும் தனது காலணியை எடுக்க வந்தபோது, அங்கிருந்த திருச்சி தென்னூா் அண்ணா நகரை சோ்ந்த கே. பூபதி (24) என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் பூபதி, எஸ்எஸ்ஐ ராஜாவை தகாத வாா்த்தைகளால் திட்டி கையால் தாக்கியுள்ளாா்.
இதுகுறித்து ராஜா ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் ஸ்ரீரங்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து பூபதியை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




