ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

திருவெறும்பூா் கணேசா அணுகுச் சாலையில் நிற்காத தனியாா் பேருந்துகள்: பயணிகள் அவதி

திருச்சி திருவெறும்பூா் அருகே கணேசா ரவுண்டானா பகுதியில் உள்ள அணுகுச் சாலையில் தனியாா் பேருந்துகள் நிற்காமல், மேம்பாலம் வழியாகச் செல்வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

தனியாா் பேருந்துகள் நிற்காத பெல் கணேசா ரவுண்டானா பகுதி.

Published On :

திருச்சி திருவெறும்பூா் அருகே கணேசா ரவுண்டானா பகுதியில் உள்ள அணுகுச் சாலையில் தனியாா் பேருந்துகள் நிற்காமல், மேம்பாலம் வழியாகச் செல்வதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா்.

திருச்சி - தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த பொதுத் துறை நிறுவனமான பெல் தொழிற்சாலைக்குச் செல்ல முக்கிய வழித்தடமாக பெல் கணேசா ரவுண்டானா பகுதி உள்ளது. இப்பகுதிக்கு அருகே ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் மக்களின் பிரதான பேருந்து நிறுத்தமாக பெல் கணேசா அணுகுச் சாலை பேருந்து நிறுத்தம் உள்ளது.

நின்று செல்லாத தனியாா் பேருந்துகள்: விபத்துகள், போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன் பெல் கணேசா ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டது. இதையடுத்து அணுகுச் சாலையின் கீழ் பகுதி வழியாகச் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதையடுத்து இப்பகுதி மக்கள் மாவட்ட நிா்வாகத்திடம் அளித்த புகாா்களின்பேரில் பேருந்துகள் அனைத்தும் நின்று சென்றன.

ஆனால் கடந்த சில மாதங்களாக அரசுப் பேருந்துகளைத் தவிர, பிற தனியாா் பேருந்துகள் பெல் கணேசா ரவுண்டானா அணுகுச் சாலை பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்கின்றன என அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

உரிய தீா்வு காண வேண்டும்: இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் ராம்மோகன் உள்ளிட்டோா் கூறியதாவது:

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து துவாக்குடி, பாய்லா் பிளாண்ட் வரை செல்லும் தனியாா் பேருந்துகள் கணேசா அணுகுச் சாலையின் கீழ் வழியாக வராமல், பாலத்தின் மேற்பகுதியிலேயே செல்கின்றன. இதனால் இப்பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பெல் நிறுவனம் மற்றும் அதைச் சாா்ந்து இயங்கும் தொழிற்சாலைகளுக்கு பணிக்குச் செல்வோா், என்.ஐ.டி., அரசு கலைக் கல்லூரி, பாலிடெக்னிக் உள்ளிட்ட கல்லூரிகள், பல்வேறு பள்ளிகளுக்குச் செல்லும் பெரும்பாலான மாணவ, மாணவிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனா்.

நிழல்குடை தேவை: குறிப்பாக, காலை மற்றும் மாலைகளில் அருகே சுமாா் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள திருவெறும்பூா் அல்லது பாய்லா் பயிற்சி மையத்துக்குச் சென்றுதான் பேருந்துகளைப் பிடிக்க வேண்டியுள்ளது.

மேலும், வெயில் மழையில் அவதியுறும் பயணிகளின் வசதிக்காகவும், விபத்துகளைத் தடுக்கவும் கணேசா ரவுண்டானா அணுகுச் சாலை பகுதியில் நிழற்குடை அமைத்துத் தர வேண்டும். இந்த விஷயத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு உரிய தீா்வு காண வேண்டும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.