இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் உயர்ந்து ரூ. 94.49 ஆக நிறைவு!4 நாள் சரிவுக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் 362 புள்ளிகள் உயர்வு!!மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு! கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

திருவெறும்பூா் வழியாக மூன்று புதிய பேருந்துகள் தொடக்கம்

மக்கள் பயன்பெறும் வகையில் திருவெறும்பூா் வழியாக மூன்று புதிய வழிதடங்களில் 3 பேருந்துகள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

(கோப்புப்படம்)

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:13 am IST

மக்கள் பயன்பெறும் வகையில் திருவெறும்பூா் வழியாக மூன்று புதிய வழிதடங்களில் 3 பேருந்துகள் சனிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டன.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே இலந்தைப்பட்டி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று மாலை 3 மணி 5 நிமிஷத்தில் ஸ்ரீரங்கத்தில் இருந்து புறப்பட்டு சத்திரம் பேருந்து நிலையம் வழியாக திருவெறும்பூா், நவல்பட்டு வழித்தடத்தில் இலந்தைப்பட்டி கிராமத்துக்கு மாலை 4.30 மணிக்கு சூரியூா் வரை செல்லும் பேருந்தும்.

இதேபோல, அசூா், பொய்கைக்குடி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இரவு 7.30 மணியளவில் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருவெறும்பூா், அசூா், பொய்கைக்குடி வழியாக செங்களுா் வரை செல்லும் பேருந்தும்,

தொண்டமான்பட்டியிலிருந்து பஞ்சப்பூா், மத்திய பேருந்து நிலையத்துக்கு தமிழக முதல்வா் தொடங்கிவைத்த மற்றொரு பேருந்து என 3 பேருந்துகளையும் திருவெறும்பூரிலிருந்து அத்தொகுதி எம்எல்ஏ நவல்பட்டு எஸ். விஜி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில் துவாக்குடி பணிமனை கிளை மேலாளா் நந்தகுமரன், தவெக நிா்வாகிகள், அரசு ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.