ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

நீர் மேலாண்மை குறித்து விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தத் திட்டம்

திருவண்ணாமலை, நவ.10: நீர் மேலாண்மை குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுப் பணித் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.   உலக வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த நீர்வள, நிலவள மேலாண்மைத் திட்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 3:08 pm

சுஜித்குமார்

திருவண்ணாமலை, நவ.10: நீர் மேலாண்மை குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த பொதுப் பணித் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

  உலக வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த நீர்வள, நிலவள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதில் பொதுப்பணித் துறை, வேளாண்மை, கால்நடை, விவசாய பொறியியல் துறை, தோட்டக் கலைத் துறை உள்ளிட்ட பல துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

  திருவண்ணாமலை பொதுப்பணித் துறை நீராதார அமைப்பின் கட்டுப்பாட்டில் கிருஷ்ணகிரி, சாத்தனூர் உள்ளிட்ட 2 பெரிய அணைகளும், 11 சிறிய அணைகளும் உள்ளன.

  இவற்றின் மூலம் கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பாசனத்துக்கு நீர் திறந்து விடப்படுகிறது.

  உலக வங்கி நிதியுதவியுடன் ஒருங்கிணைந்த நீர்வள, நிலவள மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

  இதைக் கொண்டு அணைக்கட்டுகளின் கீழ் உள்ள ஏரிகளை நவீனப்படுத்தி தூர் வாருதல், கரைகளை பலப்படுத்துதல், நீர்வரத்து கால்வாய்களை செம்மைப்படுத்துதல், நீர் கசிவு இல்லாத வகையில் நீர் மேலாண்மை செய்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகின்றன.

  இதுதொடர்பாக பொதுப்பணித் துறை வட்டாரங்கள் கூறியது:

  விவசாயத்துக்கு நீர் மேலாண்மை மிகவும் அவசியம். கிடைக்கும் குறைந்த அளவு நீரை நிறைவாக பயன்படுத்தி மகசூலைப் பெறுவது குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

  ஆங்காங்கே நீர் பயன்படுத்துவோர் சங்கம், ஆயக்கட்டு பாசனதாரர்கள் சங்கம் உள்ளிட்டவை உள்ளன. இவற்றின் மூலம் விவசாயிகளுக்கு நீர் மேலாண்மை குறித்து விளக்கிக் கூறப்படும்.

  மேலும் துரிஞ்சல் ஆறு திட்டத்தின் கீழ் 58 ஏரிகளும், ஓங்கூர் ஆறு திட்டத்தின் கீழ் 17 ஏரிளும், பாம்பனார் திருக்கோயில் ஆற்றின் கீழ் 11 ஏரிகளும் மொத்தம் ரூ.17 கோடி செலவில் சீரமைக்கப்பட்டு வருகின்றன என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.