நூல்கள் உண்டு; கட்டடம் இல்லை
அரூர், ஆக. 23:அரூர் அருகே ஓலைக் குடிசையில் தமிழக அரசின் ஊர்ப்புற நூலகம் இயங்குகிறது. நூல்கள் இருந்தாலும், அவற்றை படிப்பதற்கு தேவையான வசதி இல்லாததால் கிராமப்புற இளைஞர்கள் கட்டட வசதி கோரி வருகின்றனர். அ


அரூர், ஆக. 23:அரூர் அருகே ஓலைக் குடிசையில் தமிழக அரசின் ஊர்ப்புற நூலகம் இயங்குகிறது. நூல்கள் இருந்தாலும், அவற்றை படிப்பதற்கு தேவையான வசதி இல்லாததால் கிராமப்புற இளைஞர்கள் கட்டட வசதி கோரி வருகின்றனர்.
அரூர் ஒன்றியம், கொங்கவேம்பு ஊராட்சிக்குட்பட்டது எஸ்.பட்டி கிராமம். இவ்வூராட்சியில் வாதாப்பட்டி, கருத்தம்பட்டி, மோட்டூர், வள்ளுவர் நகர், பாரதிபுரம், கோரிமேடு உள்ளிட்ட குக்கிராமங்கள் உள்ளன. எஸ்.பட்டியில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
இங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள், பெண்கள் உள்ளனர்.
கல்வி, வேலைவாய்ப்புகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்த எஸ்.பட்டி கிராமத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை கள்ளச் சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் குடிசைத் தொழிலாக இருந்தது.
கிராமத்தில் அடிக்கடி சமூக மோதல்கள், தேவையற்ற தகராறுகள் ஏற்பட்டு வந்ததை அடுத்து 15 ஆண்டுகளாக அரூர் காவல் நிலையப் பட்டியலில் கரும்புள்ளி கிராமமாக எஸ்.பட்டி இருந்து வருகிறது.
தற்போது கிராமத்தில் படித்த இளைஞர்கள் தலையெடுத்ததை அடுத்து கள்ளச்சாராயம் அறவே ஒழிக்கப்பட்டுள்ளது.
கிராமத்தில் படித்த வேலையில்லா இளைஞர்கள் இருப்பதால், அவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்க வசதியாகவும், அறிவை வளர்த்துக் கொள்ளவும் ஏதுவாக ஊர்புற நூலகம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது.
அதையடுத்து 21.05.2008-ல் தமிழ்நாடு அரசின் நூலகத் துறை சார்பில் ஊர்ப்புற நூலகம் தொடங்கப்பட்டது. ஆனால் இதுவரை நூலகர் எவரும் நியமிக்கப்படவில்லை. ஊரைச் சேர்ந்த இளைஞர் தினக்கூலி அடிப்படையில் இப்பணியை செய்து வருகிறார்.
நூலகம் தொடங்குவதற்கு முன்பே 29.10.2007-ல் ஊர் பொதுமக்கள், மாவட்ட நூலக அலுவலகத்துக்கு 10 சென்ட் நிலம் பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த ஊர்ப்புற நூலகத்தில் 588 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். தலா ரூ.1000 நன்கொடை அளித்து 12 நூலக புரவலர்கள் இணைந்துள்ளனர்.
வீடுவீடாக மாறும் நூலகம்
தொடக்கத்தில் தனியார் ஒருவரது ஓட்டு வீட்டில் நூலகம் இயங்கத் தொடங்கியது.
அதன் பிறகு 10-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு இந்த நூலகம் இடம் பெயர்ந்தது. தற்போது கூரை வீடு ஒன்றில் தாற்காலிகமாக இயங்கி வருகிறது.
இந்த கூரை வீடு மழை நேரத்தில் பாதுகாப்பற்றதாக இருப்பதால், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பாழாகும் சூழல் நிலவுகிறது.
இளைஞர்கள் இந்த நூல்களை பாதுகாக்க பிளாஸ்டிக் பைகள், கோணிப் பைகளைக் கொண்டு மூடி பாதுகாக்கின்றனர்.
நூலகத்துக்கு தேவையான இடம் இருந்தும், அதற்கான கட்டடம் கட்டாதது குறித்து உயர் அதிகாரிகளுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் பலமுறை முறையிட்டும் பயனில்லை என்று கிராமத்தி
கிருஷ்ணகிரி, ஆக.23: கிருஷ்ணகிரியை அடுத்த கந்திகுப்பம் கிராமத்தில் உள்ள தூய விண்ணரசி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை தேர் பவனி நடைபெற்றது (படம்).
ஆலயத்தில் 15-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
தொடர்ந்து மூன்று நாள்கள், சென்னை இயேசுவின் இரத்தசபை அருட்பணி ராஜ், திருப்பலி பூஜைகள் செய்து மறை உரையாற்றினார்.
திருப்பத்தூர், தூய நெஞ்சக் கல்லூரி முதல்வர் மரிய சூசை, பாளையங்கோட்டை சோர்தான் அற்புத ஊழியர்கள் சார்பில் திருப்பலி, ஜெபமாலை மற்றும் மறையுரைகள் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை இரவு அலங்கரிக்கப்பட்ட தேரில் அன்னை ஊர்வலம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி, ஏலத்தகிரி, கந்திகுப்பம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து ஏராளமான கிருத்துவ சமூகத்தினர் தேர்பவனி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
திங்கள்கிழமை கொடியிறக்கம் மற்றும் நன்றி திருப்பலி நிகழ்ச்சிகளுடன் விழா நிறை
வடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...