இருக்கு.. ஆனா இல்லை..!
செய்யாறு, ஜூலை 29: அரசு வழங்கிய இலவச பஸ் பாஸ் உள்ளபோதும், அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளனர். செய்யாறில் உள்ள அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் ஆரணி, செய்யாறு, ஆர்க்காடு மற்றும் உத்தி


செய்யாறு, ஜூலை 29: அரசு வழங்கிய இலவச பஸ் பாஸ் உள்ளபோதும், அதைப் பயன்படுத்த முடியாத நிலையில் மாணவர்கள் உள்ளனர்.
செய்யாறில் உள்ள அரசு, தனியார் கல்வி நிறுவனங்களில் ஆரணி, செய்யாறு, ஆர்க்காடு மற்றும் உத்திரமேரூர் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் அரசு வழங்கிய இலவச பஸ் பாஸ் பெற்றுள்ளனர்.
ஒரே பஸ்ஸில்
400 மாணவர்கள் பயணம்!
செய்யாறு-ஆரணி வழித்தடத்தில் ஒரேயொரு நகரப் பேருந்துதான் செய்யாறு பணிமனையில் இருந்து இயக்கப்படுகிறது.
இதில் சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணிக்கின்றனர். பஸ் கூரைகளின் மீது அமர்ந்தும், படிக்கட்டுகளிலும் மாணவர்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர்.
பொதுமக்களின் கோரிக்கையின்பேரில், ஆரணி பணிமனையில் இருந்து இயக்கப்பட்ட பஸ் கடந்த சில மாதங்களுக்கு முன் திடீரென நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால், மாணவர்கள் மேற்கண்ட சிரமத்தை அடைந்து வருகின்றனர்.
செய்யாறு-ஆர்க்காடு வழித்தடத்தில் உள்ள கிராமங்களில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பஸ் பாஸ் பெற்றுள்ளனர். ஆனால், இவர்கள் பயணிக்க அரசின் நகரப் பேருந்து வசதி இல்லை. இதனால், மாணவர்கள் தனியார் பஸ்களிலும், அரசின் புறநகர் பஸ்களில் கட்டணம் செலுத்தி பயணித்து வருகின்றனர்.
பள்ளி நேரத்துக்கு பயணிக்க முடியாத டவுன் பஸ்!
செய்யாறு-உத்திரமேரூர் வழித்தடத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்து உத்திரமேரூரில் இருந்து புறப்பட்டு செய்யாறுக்கு காலை 10 மணிக்கு மேல்தான் வருகிறது. அதேபோல, மதியம் 3.30 மணிக்கு செய்யாறில் இருந்து புறப்பட்டு உத்திரமேரூருக்கு செல்கிறது.
எனவே, மேற்கண்ட வழித் தடங்களில் நகரப் பேருந்துகளை கூடுதலாக இயக்கியும், கல்வி நிறுவனங்களுக்கு சென்று, வரும் வகையில் நேரத்தை மாற்றி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதே செய்யாறு பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...