ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மெதுவா.. மெதுவா.. ஒரு மேம்பால பணி!

செய்யாறு,நவ. 26: செய்யாறு அருகேயுள்ள பிரம்மதேசத்திலிருந்து ஓச்சேரிக்கு இடையே கட்டப்படும் மேம்பாலப் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். வெம்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள பிர

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:37 pm

தே.சாலமன்

செய்யாறு,நவ. 26: செய்யாறு அருகேயுள்ள பிரம்மதேசத்திலிருந்து ஓச்சேரிக்கு இடையே கட்டப்படும் மேம்பாலப் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

வெம்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள பிரம்மதேசம் வழியாக பாலாறு செல்கிறது. இந்த ஒரு கரையில் பிரம்மதேசமும், மற்றொரு கரையில் வேலூர் மாவட்டத்தின் ஓச்சேரியும் அமைந்துள்ளது.

வெம்பாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த பிரம்மதேசம், நாட்டேரி, அரியூர், புதூர், வெங்களத்தூர், செய்யனூர்பேட்டை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாலாற்றை கடந்து ஓச்சேரிக்குச் செல்கின்றனர்.

பாலாற்றில் வெள்ளம் வரும்போது, இவர்கள் புதுப்பாடி, ஆர்க்காடு, ராணிப்பேட்டை, வாலாஜா, காவேரிப்பாக்கம் ஆகிய பகுதிகள் வழியாகச் செல்லும் நிலை ஏற்படுகிறது. இதனால், பயண நேரம் அதிகரித்து, செலவும் கூடுகிறது.

2010-ல் ரூ.10 கோடியில் மேம்பாலம் அமைக்க உத்தரவு

இந்நிலையில், மேற்கண்ட கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 2010ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.10 கோடியில் பிரம்மதேசம்-ஓச்சேரி இடையே பாலாற்றில் மேம்பாலம் அமைக்க அப்போதைய தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த மேம்பாலம் 335 மீ. நீளமும், 12 மீ. அகலத்திற்கும், 30 மீ. உயரத்திலும் அமைக்கப்படவுள்ளது. இப்பாலத்தில் 18 தூண்களும், மக்கள் சென்றுவர இரு புறங்களிலும் 2.25 மீ. அகலத்தில் நடைபாதைகளும் அமைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

மந்த நிலையில் பணிகள் நடப்பதாகப் புகார்

இந்நிலையில், மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கி சுமார் 1 ஆண்டு ஆகிறது.

இருப்பினும், பணிகள் மந்த நிலையில் நடந்து வருவதாகவும், இதனால் 50 சதவீத பணிகள் கூட நிறைவு பெறவில்லை என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டிவருகின்றனர்.

எனவே, மேம்பாலம் கட்டும் பணியை விரைவாக முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிராம மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.