ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

வாகன ஓட்டிகளை சோதிக்கும் செய்யாறு பைபாஸ் சாலை

செய்யாறு, செப். 2: செய்யாறு பைபாஸ் சாலையில் உரிய வழிகாட்டிப் பலகைகளோ, பாதுகாப்பு ஏற்பாடுகளோ இல்லாததால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். செய்யாறு பைபாஸ் சாலை ரூ.440 லட்சத்தில் 3 க

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:13 am

தே.சாலமன்

செய்யாறு, செப். 2: செய்யாறு பைபாஸ் சாலையில் உரிய வழிகாட்டிப் பலகைகளோ, பாதுகாப்பு ஏற்பாடுகளோ இல்லாததால் வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

செய்யாறு பைபாஸ் சாலை ரூ.440 லட்சத்தில் 3 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டது. இது கடந்த 25.02.11-ல் பயன்பாட்டுக்கு வந்தது. செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி அருகில் இருந்து திருவோத்தூர் மேம்பாலம் வரையில் இந்த பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை வாகன ஓட்டிகளுக்கு சில வகையில் உதவியாக இருந்தாலும், பல வகையில் சிரமங்களை ஏற்படுத்தி வருகிறது. ஆரணி கூட்டு சாலை, கொடநகர் தேவேனரி குளக்கரை சாலை, கோபால் தெரு கொட நகர் சாலை ஆகிய சந்திப்புப் பகுதிகளில் வேகத்தடைகள் அமைக்கப்படாததால் விபத்துகள் நேரிடுகின்றன.

வழிகாட்டிப் பலகைகள் இல்லை

இப்பகுதிகளில் உரிய வழிகாட்டிப் பலகைகள் இல்லாததால் புதிதாக வரும் வாகன ஓட்டிகள் அவ்வழியே செல்வோரை கேட்டுச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

தடுப்புச் சுவர்கள் இல்லை

மேலும் ஆபத்தான பகுதிகளில் சாலையோரம் தடுப்புச் சுவர்களும் அமைக்கப்படவில்லை. பைபாஸ் சாலைக்கு பக்கத்தில் கிணறு மற்றும் பள்ளங்கள் அதிகம் காணப்படுவதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது.



இருளில் சாலை

செய்யாறு நகரப் பகுதிக்கு மிக அருகில் இந்த பைபாஸ் சாலை செல்வதால் நகரப் பகுதி மக்கள் அதிக அளவில் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். ஆனால் பைபாஸ் சாலையில் விளக்குகள் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கின்றனர்.

எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து உரிய இடங்களில் வழிகாட்டிப்பலகைகள் அமைக்க வேண்டும், தடுப்புச் சுவர், வேகத்தடைகள் அமைக்க வேண்டும், அதிக ஒளிதரும் மின்விளக்குகளை பொருத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.



 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.