ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மாங்காலில் வீட்டுமனைகளாகும் விளைநிலங்கள்

செய்யாறு, செப். 11: செய்யாறை அடுத்த மாங்கால் சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில், விவசாய நிலங்கள் பெருமளவில் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் உள்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:21 am

தே.சாலமன்

செய்யாறு, செப். 11: செய்யாறை அடுத்த மாங்கால் சிப்காட் தொழிற்பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில், விவசாய நிலங்கள் பெருமளவில் வீட்டு மனைகளாக மாறி வருகின்றன.

திருவண்ணாமலை மாவட்டத்தின் வடகிழக்கு எல்லையில் உள்ள செய்யாறிலிருந்து  காஞ்சிபுரம் 15 கி.மீ. தொலைவிலும், சென்னை 90 கி.மீ. தொலைவிலும் உள்ளன.

இந்நிலையில், செய்யாறை அடுத்த மாங்கால் பகுதியில் 2,300 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழக அரசு சார்பில் சிப்காட் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டுள்ளது.

 இதில், முதல்கட்டமாக 1,300 ஏக்கர் பரப்பில் 10-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் செய்யாறு, வந்தவாசி மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர். இதுமட்டுமின்றி, வெளிமாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பணிபுரிகின்றனர்.

இந்நிலையில், சிப்காட்டை ஒட்டியுள்ள வெம்பாக்கம் நமண்டி, மாமண்டூர், தூசி, மாங்கால் மற்றும் செய்யாறு நகரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைநிலங்கள்  வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இங்கு பணிபுரிவோர் இந்த வீட்டுமனைகளைப் போட்டிப் போட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.