ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

மனதைக் கவரும் மாமண்டூர் மலை! உயிரோட்டமுள்ள குடை சிற்பங்கள்; மலைக்க வைக்கும் மலைக் கோயில்கள்

செய்யாறு,மே 7: செய்யாறை அடுத்துள்ள தூசி மாமண்டூர் மலைக்கோயிலில் அமைக்கப்பட்ட குடை சிற்பங்களும், மலைக்கோயில்களும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளன.  பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் கி.பி.

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:10 am

தே.சாலமன்

செய்யாறு,மே 7: செய்யாறை அடுத்துள்ள தூசி மாமண்டூர் மலைக்கோயிலில் அமைக்கப்பட்ட குடை சிற்பங்களும், மலைக்கோயில்களும் சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் கவர்ந்துள்ளன.

 பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் கி.பி. 600-630 ஆண்டுகளுக்கிடையில் மாமண்டூர் மலையைக் குடைந்து, குடைக்கோயில் அமைத்துள்ளதாகவும், அப்போது அவர் மத்த விலாசப் பிரகடனம் என்ற நாடகத்தை இயற்றியுள்ளதாகவும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகப் பெரிய ஏரியாகத் திகழும் மாமண்டூர் ஏரியின் பாதுகாவாலனாக இந்த மலை அமைந்துள்ளது. இதனைச் சுற்றியுள்ள பகுதியும், தொடர்ச்சியாக மூன்று மலைகள் இயற்கையாகவே அமைந்து அழகாகக் காட்சியளிக்கின்றன.

 தஞ்சைக்கு அடுத்தாற்போல் நெற்களஞ்சியத்துக்கு இம்மாவட்டம் பெயர் பெற்றுள்ளது. இந்த ஏரி சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவுக்கு நஞ்சைப் பாசனத்துக்கு முக்கியமாக வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.

 3 மலைகளில் உள்ள கோயில்கள்

 மூன்று மலைகளில் முதல் மலை நரசமங்கலம் பகுதியில் அமைந்துள்ளது. அதில், முற்று பெறாத நிலையில் 3 கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2-வது மலையில் மலையைக் குடைந்து 5 கருவறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 இந்த மலையின் உச்சியில் இரு கோயில்கள் அமையப் பெற்றுள்ளன. அவற்றில் ஒன்றில் சிவலிங்கம் வைத்து வழிபட்டதும், மற்றொரு கோயிலில் நாய் உருவத்துடன் பைரவர் வடக்கு நோக்கிக் காட்சியளிக்கின்றன.

 3-வது மலையில் தூண் வரிசையுடன் 3 கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கருவறைக்கும் இரு புறங்களில் துவாராபாலகர்கள் என்று அழைக்கப்படும் வாயிற்காப்பாளர்கள் போன்ற உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறைப் பகுதியில் சிதைந்த நிலையில் ஒரு சிவலிங்க சிலை ஒன்றும் அப்பகுதியில் காணப்படுகிறது. லிங்கம் மிகவும் வழவழப்பான கல்லில் செதுக்கப்பட்டு இன்றும் பார்வையாளர்களுக்கு அழகுடன் ரம்மியமாகக் காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

 உயிரோட்டமான சிற்பங்கள்

 மேலும், இப்பகுதியில் சிதைந்த நிலையில் சிலைகள் மற்றும் நந்தி உருவம் கொண்ட சிற்பங்களும் உள்ளன. இச்சிற்பங்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன் மாமண்டூர் குகை கோயிலில் செதுக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வர்கள் கூறுகின்றனர்.

 இந்தக் குகையின் தூண்கள் பெரிதாகவும், அகலமாகவும் சிற்பங்கள் மிகத் தெளிவாகவும், மிகவும் உயிரோட்டமுள்ள சிற்பங்களாகவும், பார்ப்பவர்களின் மனதைக் கவர்ந்து, மெய்மறக்கச் செய்யும் நிலையில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

 பூத்துக் குலுங்கும்  நெல் வயல்கள்

 மலையடியின் கீழ்ப்பகுதியில் நெல் வயல்கள் பசுமைப் போர்த்தியது போல் பச்சைப்பசேல் என்று காணப்படுகின்றன.

 மாமண்டூர் மலைக்கோயில் குடைச் சிற்பங்கள் இயற்கையாகவே அமையப் பெற்றுள்ளன. தொடர்ச்சியாக உள்ள மலையில் சுனை நீரில் எப்போதும் நீர் கசிந்து கொண்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.