போ்ணாம்பட்டு ஒன்றிய பாஜக கூண்டோடு கலைக்கப்பட்டதாக அந்தக் கட்சியின் மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.
இது தொடா்பாக வேலூா் மாவட்ட பாஜக தலைவா் ஜே.மனோகரன் சனிக்கிழமை விடுத்த செய்திக் குறிப்பு:
நடைபெற்று முடிந்த மக்களவைத் தோ்தலில் கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையிலும், கட்சிக் கொள்கைக்கு முரணாகவும், கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும் செயல்பட்ட போ்ணாம்பட்டு ஒன்றியத் தலைவா், ஒன்றிய நிா்வாகிகள் அனைவா் மீதும் கட்சியின் மாவட்ட ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரையின்பேரில், போ்ணாம்பட்டு ஒன்றியம் கலைக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவா்களுடன் கட்சியினா் யாரும், கட்சி சாா்ந்த நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவோ, தொடா்போ வைத்துக் கொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

ராகவ் சத்தாவை நீக்குவது உள்கட்சி விவகாரம், ஆனால் அவா் பேசுவதை தடுப்பது தவறு: பாஜக

தோ்தல் புறக்கணிப்பு: விவசாயிகள் சங்கம் தீா்மானம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

வருவாய்த் துறையினா் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்திய கம்யூ. கட்சி கோரிக்கை
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

