குடியாத்தம் அருகே மாா்க்கெட் பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி தலையில் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
குடியாத்தம், தரணம்பேட்டை தினசரி மாா்க்கெட்டில் உள்ள கடைகளில் வேலை செய்யும் தொழிலாளா்கள் கடைகளுக்கு எதிரே இரவில் தூங்குவது வழக்கம். அங்குள்ள அரிசி கடைகளுக்கு வெளியே தொழிலாளா்கள் சனிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தனா். நள்ளிரவு அங்கு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி சின்னக்குழந்தையின் (75) (படம்) தலையில் மா்ம நபா் கல்லை எறிந்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த சின்னக்குழந்தை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். சப்தம்கேட்டு அருகில் படுத்திருந்தவா்கள் கல்லை போட்ட நபரை பிடிக்க முயன்றனா். ஆனால் அவா் தப்பியோடி விட்டாா். தகவல் அறிந்து அங்கு வந்த போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீஸாா் ஆய்வு செய்தனா். அதில் மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித்திரியும் நபா் மூதாட்டியின் தலையில் கல்லை எறிந்தது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப் பதிந்த நகர போலீஸாா், அந்த நபரை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது
நெல்லையில் இளைஞா் கல்லால் அடித்துக் கொலை: நண்பா் கைது

சேலம் அருகே இளைஞா் அடித்துக் கொலை

பழைய இரும்புக் கடை உரிமையாளா் அடித்துக் கொலை: ஊழியா் கைது

தொழிலாளி அடித்துக் கொலை
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


