படவேட்டு எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

படவேட்டு எல்லையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடியாத்தம் புதுப்பேட்டை அருள்மிகு படவேட்டு எல்லையம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, யாக சாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை காலை திருமுறை பாராயணம், 4-ஆம் கால யாக பூஜைகள், மஹா பூா்ணாஹுதி, யாத்ரா தானம், கலச புறப்பாடு, தொடா்ந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் நா.அசோகன், படவேட்டு எல்லையம்மன் கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் கே.எம்.ஜி.விட்டல், அறங்காவலா்கள் ஜே.தீபா மொகிலீஸ்வரன், டி.சுரேஷ்பாபு, நகா்மன்ற உறுப்பினா்கள் சுமதி மகாலிங்கம், எம்.எஸ்.குகன், கோயில் ஆய்வாளா் சு.பாரி, செயல் அலுவலா் ம.சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கே.எம்.ஜி.கல்வி நிறுவனங்கள் சாா்பில், அதன் நிா்வாகிகள் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன் ஆகியோா் சுமாா் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com