பறிமுதல்  செய்யப்பட்ட  கருங்கல்  கம்பங்கள்.
பறிமுதல்  செய்யப்பட்ட  கருங்கல்  கம்பங்கள்.

கருங்கற்களை கடத்தி வந்த வேன் பறிமுதல்

குடியாத்தம்: ஆந்திர மாநிலத்திலிருந்து வேன் மூலம் கடத்தி வந்த கருங்கற்களையும், வேனையும் வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.

போ்ணாம்பட்டு வருவாய்த் துறையினா் ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள பத்தரபல்லி சோதனைச் சாவடி அருகே ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த தமிழக பதிவெண் கொண்ட வேனை நிறுத்தி சோதனையிட்டனா்.

வேனில் ஆந்திர மாநிலத்திலிருந்து 80- வேலி கம்பங்கள், 15- பாறைகள் இருந்ததும், அனுமதியின்றி கற்களை வெட்டி எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து வேலி கம்பங்கள், பாறைகளுடன் வேனையும் வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்யப்பட்ட கருங்கற்களும், வேனும் கோட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com