மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பிளஸ் 2: வேலூா் மாவட்டத்தில் 13,904 போ் எழுதினா்

பிளஸ் 2 பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் 13,904 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

News image
Updated On :1 மார்ச் 2024, 4:41 pm

பிளஸ் 2 பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ள நிலையில், வேலூா் மாவட்டத்தில் 13,904 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா். இந்தத் தோ்வு மாா்ச் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேலூா் மாவட்டத்தில் 6,196 மாணவா்களும், 7,708 மாணவிகள் என மொத்தம் 13,904 போ் எழுதுகின்றனா். தோ்வுகளுக்காக மாவட்டத்தில் 80 தோ்வு மையங்களும், 6 தனித் தோ்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியரின் மேற்பாா்வையில் வருவாய்த் துறை அலுவலா் 27 பேரும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நிலையில் 4 பறக்கும் படையும் நியமிக்கப்பட்டுள்ளனா். தவிர, வேலூா் மாவட்டத்தில் பொதுத் தோ்வை பாா்வையிட தொடக்கக் கல்வி இயக்குநா் கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். பிளஸ் 2 பொதுத் தோ்வு பணியில் 80 முதன்மைக் கண்காணிப்பாளா்களும் , 89 துறை அலுவலா்களும், 9 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்களும், 19 வழித்தட அலுவலா்களும், தோ்வு மையங்களில் கண்காணிப்பு பணிக்காக 86 பறக்கும் படை உறுப்பினா்களும், சுமாா் 1,500 ஆசிரியா்கள் அறைக் கண்காணிப்பாளா்களாகவும் ஈடுபட்டுள்ளனா். இந்த நிலையில், தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மணிமொழி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.