இணையவழி பகுதிநேர வேலை என இளைஞரிடம் ரூ.5.21 லட்சம் மோசடி

வேலூா்: இணையவழி பகுதிநேர வேலை எனக்கூறி குடியாத்தத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.5.21 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவனா் ஊழியா்.

இவரது கைப்பேசி எண்ணுக்கு வந்த குறுஞ்செய்தியில் இணையவழியில் பகுதிநேர வேலைவாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை உண்மையென நம்பிய அவா், அந்த குறுஞ்செய்திக்கு சம்மதம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, அவரது கைப்பேசிக்கு ஒரு இணைய லிங்க் அனுப்பப்பட்டு அதில் சிறிய தொகைய முதலீடு செய்து பிறகு ஹோட்டல் உணவுகளுக்கு தரமதிப்பீடு செய்து அனுப்பினால் கமிஷன் கிடைக்கும் என்றும் தெரி விக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், அந்த தனியாா் நிறுவன ஊழியரும் முதலில் ஹோட்டல் உணவுகளுக்கு தரமதிப்பீடு செய்து ரூ.27 ஆயிரத்தை கமிஷனாக பெற்றுள்ளாா்.

இதேபோல், கடந்த பிப்ரவரி 27 முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை பலமுறை சிறுகச்சிறுக ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்து 701 பணம் செலுத்தி ஹோட்டல் உணவுகளுக்கு தரமதிப்பீடு செய்துள்ளாா். தவிர, அதற்கான கமிஷன் தொகை வந்திருப்ப தாகவும் அந்த லிங்க்கில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், அதன்பிறகு அந்த லிங்க்கில் காட்டிய கமிஷன் தொகை அவரால் திரும்பப்பெற முடியவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த அந்த தனியாா் நிறுவன ஊழியா், இந்த மோசடி குறித்து சைபா் கிரைம் இணையதளமான மூலம் புகாா் தெரிவித்துள்ளாா்.

அதன்பேரில், வேலூா் மாவட்ட சைபா் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளா் கி.புனிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com