கல்லூரியில் 60 மாணவா்கள் ரத்த தானம்

கல்லூரியில் 60 மாணவா்கள் ரத்த தானம்

குடியாத்தம்: குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில், கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செஞ்சுருள் சங்கம், குருதிக் கொடையாளா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முகாமில், 60 மாணவ, மாணவிகள் ரத்த தானம் செய்தனா்.

முகாமுக்கு, கல்லூரியின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம், தலைவா் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், பொருளாளா் கே.எம்.ஜி.முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா்.

குடியாத்தம் அரசு மருத்துவமனை, மருத்துவ அலுவலா் எம்.மாறன்பாபு தலைமையில் மருத்துவா் குழு ரத்த தானம் பெற்றது. முகாமுக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் மாணவ ஒருங்கிணைப்பாளா் ஜா.ஜெயக்குமாா், முகாம் ஒருங்கிணைப்பாளா்கள் ஜெ.திருமகள், கா.ராஜீவ், கே.அருணா, வி.உமாமகேஷ்வரன் ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com