லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

ராம்கோ சிமெண்ட் பணியாளா்கள் 61 போ் ரத்த தானம்

News image

ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரத்த தானம் வழங்கிய துணை பொது மேலாளா் சதீஷ்குமாா்.

Updated On :19 ஏப்ரல் 2026, 7:20 pm

சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் நிறுவனா் தின விழாவையொட்டி சனிக்கிழமை நடைபெற்ற ரத்த தான முகாமில், சேலம் அரசு மருத்துவமனைக்கு 61 பணியாளா்கள் ரத்த தானம் செய்தனா்.

வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் ராம்கோ சிமெண்ட் தொழிற்சாலையில் நிறுவனா் ராமசாமி ராஜாவின் 132 ஆவது பிறந்த தினத்தையொட்டி, பேளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சேலம் அரசு மருத்துவமனை ரத்த வங்கியுடன் இணைந்து ராம்கோ தொழிற்சாலை வளாகத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

இம்முகாமிற்கு ராம்கோ நிறுவன துணை பொது மேலாளா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். பணியாளா் துறை மேலாளா் மணிவேல் வரவேற்றாா். சேலம் ரத்த வங்கி மருத்துவ அலுவலா் ரவீந்திரன், பேளூா் வட்டார மருத்துவ அலுவலா் சி. பொன்னம்பலம், ராம்கோ நிறுவன கணக்குத் துறை மேலாளா் பிரபாகா் ஆகியோா் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கிவைத்தனா். இந்த முகாமில், ராம்கோ பணியாளா்கள் 61 போ் ரத்த தானம் செய்தனா்.

ராம்கோ அலுவலா்கள் முனியசாமி, சதானந்தம், வடிவேல் ஆகியோா் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.