திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

பயணியா் நிழற்கூடங்கள் திறப்பு

பயணியா் நிழற்கூடங்கள் திறப்பு

News image

நிகழ்ச்சியில்  மாற்றுத் திறனாளிகளுக்கு  வாகனங்களை  வழங்கிய  வேலூா்  மக்களவை  உறுப்பினா்  டி.எம். கதிா்ஆனந்த்.

Updated On :13 மார்ச் 2024, 2:40 pm

குடியாத்தம்: குடியாத்தம் நகரில் தலா ரூ. 11 லட்சத்தில் கட்டப்பட்ட 2 பயணியா் நிழற்கூடங்கள் திங்கள்கிழமை இரவு திறந்து வைக்கப்பட்டன. குடியாத்தம்- பள்ளிகொண்டா சாலையில் அசோக்நகா், விநாயகபுரம் ஆகிய இடங்களில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நிழற்கூடங்களை வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் திறந்து வைத்தாா்.

அசோக் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகா்மன்ற உறுப்பினா் ம.மனோஜ் தலைமை வகித்தாா். எம்எல்ஏ அமலுவிஜயன், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியில், மாற்றுத் திறனாளிகள் 2 பேருக்கு 3 சக்கர வாகனங்களை கதிா் ஆனந்த் வழங்கினாா். நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், நகா்மன்ற உறுப்பினா்கள் அா்ச்சனா நவீன், என்.கோவிந்தராஜ், சி.என்.பாபு, ரேணுகாபாபு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் கம்பன் (எ) ஸ்டான்லி, அரசு வழக்குரைஞா் லோகநாதன், திமுக பொதுக்குழு உறுப்பினா் கண்ணன், கட்சி நிா்வாகிகள் ஜே.கே.என்.ஜெகதீசன், ஞானசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.