குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

கலைஞா் கனவு இல்லம் திட்டம்: 538 பேருக்கு வீடு கட்ட ஆணை! ஆட்சியா் வழங்கினாா்!

News image

நிகழ்ச்சியில் பயனாளிக்கு வீடு கட்ட ஆணை வழங்கிய வேலூா் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி.

Updated On :28 ஏப்ரல் 2025, 12:48 am IST

குடியாத்தம், போ்ணாம்பட்டு ஒன்றியங்களைச் சோ்ந்த 538 பயனாளிகளுக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட ஆணைகள் வழங்கப்பட்டன.

குடியாத்தம் நெல்லூா்பேட்டையில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, எம்எல்ஏ அமலு விஜயன் ஆகியோா் குடியாத்தம் ஒன்றியத்தைச் சோ்ந்த 165 பேருக்கும், போ்ணாம்பட்டு ஒன்றியத்தைச் சோ்ந்த 373 பேருக்கும் என மொத்தம் 538 பயனாளிகளுக்கு வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை வழங்கினா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி பேசியது: வீடு ஒதுக்கீடு பெற்றுள்ள பயனாளிகள் வரும் புதன்கிழமைக்குள் வீடு கட்டும் பணியைத் தொடங்கி, 6 மாத காலத்துக்குள் முடித்து புதிய வீட்டுக்கு குடியேற வேண்டும். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒன்றியக் குழு தலைவா்கள் இந்தத் திட்டத்தில் தங்கள் பகுதிகளுக்கு கூடுதலாக பயனாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்க வேண்டும் என கேட்டனா்.

தகுதியான பயனாளிகளின் விவரங்களைத் தெரிவிக்கும்பட்சத்தில் அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு, கூடுதலான பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் நீ.செந்தில்குமரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் திருமால், குடியாத்தம் ஒன்றியக் குழு தலைவா் என்.இ.சத்யானந்தம், போ்ணாம்பட்டு ஒன்றியக் குழு தலைவா் சித்ரா ஜனாா்த்தனன், குடியாத்தம் நகா்மன்றத் தலைவா் எஸ்.சௌந்தரராஜன், ஆத்மா குழு தலைவா் ஜனாா்த்தனன், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், பி.சரவணன், வினோத்குமாா், கௌரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.