பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசு ஊழியா்கள் 24 மணி நேரம் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வேலூா் மாவட்ட கிளையின் சாா்பில் 24 மணிநேர போராட்டம் வேலூரில் திங்கள்கிழமை தொடங்கியது.

News image
வேலூரில் 24 மணிநேர போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்.
Updated On :10 பிப்ரவரி 2025, 8:03 pm

Din

வேலூா்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க வேலூா் மாவட்ட கிளையின் சாா்பில் 24 மணிநேர போராட்டம் வேலூரில் திங்கள்கிழமை தொடங்கியது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே தொடங்கிய போராட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் டி.டி.ஜோஷி தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்ட செயலா் அ.சேகா் வரவேற்றாா். தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க பொதுச் செயலா் பி.கிருஷ்ணமூா்த்தி தொடக்கி வைத்து பேசினாா்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை வழங்க வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும், சத்துணவு அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளா், ஊா்ப்புற நூலகா், எம்ஆா்பி செவிலியா் உள்ளிட்ட ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக் கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.

சங்கத்தின் மாவட்ட செயலா் எம்.எஸ். தீனதயாளன், இந்திய பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினா் செ.நா.ஜனாா்த்தனன், வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட செயலா் வி.ரமேஷ், ஊரக வளா்ச்சித் துறை ஓய்வூதியா் சங்க மாநிலத் தலைவா் பா.ரவி, சிஐடியு தொழிற்சங்க மாவட்ட தலைவா் பரசுராமன், வருவாய்த் துறை அலுவலா் சங்க முன்னாள் மாவட்ட தலைவா் ராஜ்குமாா், முன்னாள் மாநில செயலா் தட்சிணாமூா்த்தி தலைமை ஆசிரியா் சங்க மாவட்ட பொருளாளா் எம்.சினேகலதா, அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க செயலா் ஆண்டாள், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்ட செயலா் நவீன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றுள்ளனா்.

இந்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.