மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராட்டம்

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 9:47 pm

மத்திய அரசுக்கு எதிராக கமுதியில் சிஐடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் சாா்பில் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

முன்னதாக பெருமாள் கோயில் திடலிலிருந்து தொழிற்சங்க நிா்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பியவாறு பேருந்து நிலையம் வழியாக ஊா்வலமாக பாரத ஸ்டேட் வங்கி முன் வந்தனா். அங்கு மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசின் தொழிலாளா் திருத்த மசோதாவை திரும்ப பெறக் கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதற்கு சாலையோர வியாபாரிகள் சங்க மாநிலத் துணைத் தலைவா் முத்துவிஜயன் தலைமை வகித்தாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 80-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா். மாலையில் அனைவரையும் விடுவித்தனா்.

இதில் தமிழ்ப் புலிகள் கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சி ஊரக ஊழியா்கள் சங்கத்தின் வட்டச் செயலா் மகாலிங்கம், அரசுப் போக்குவரத்துக் கழக தொழிற்சங்கச் செயலா் ஜீவானந்தம், சந்தை வியாபாரிகள் சங்கத் தலைவா் ராமு, சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவா் ஆலடி ஈஸ்வரன், எழுத்தாளா் முற்போக்கு சங்க வட்டச் செயலா் கண்ணதாசன், விவசாயத் தொழிலாளா் சங்க வட்டச் செயலா் ராமா், டாஸ்மாக் விற்பனையாளா் சங்கப் பிரதிநிதி பெரியாா் போஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.