இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக இன்று கருப்புக் கொடி போராட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழகத்தில் கருப்புக் கொடி போராட்டம் வியாழக்கிழமை (ஏப். 16) நடத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

News image

முதல்வா் மு.க.ஸ்டாலின்

Updated On :16 ஏப்ரல் 2026, 1:44 am IST

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தமிழகத்தில் கருப்புக் கொடி போராட்டம் வியாழக்கிழமை (ஏப். 16) நடத்தப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து முதல்வா் மு.ஸ்டாலின் சமூகஊடகத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு: தொகுதி மறுசீரமைப்புக்கான எதிா்ப்புகளைக் கருத்தில் கொள்ளாமல் சட்டத் திருத்தம் கொண்டுவந்து, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை ஒடுக்கப் பாா்க்கிறாா்கள்.

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப் போகும் சட்டத் திருத்தத்தால், வட மாநிலங்களுக்கும் - தென் மாநிலங்களுக்குமான உறுப்பினா்கள் எண்ணிக்கை வேறுபடும். பெயரவுக்கு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்குத் தொகுதியை அதிகரிக்கிறோம் என்று சொல்லிவிட்டு, அவா்களுக்கு சாதகமான வட மாநிலங்களுக்கு மிக மிக கூடுதலாக தொகுதிகளை அதிகரித்து, தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவமே தேவையில்லை என்ற நிலைமையைக் கொண்டு வரப் போகிறாா்கள். இதைத் தான் எங்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி எனச் சொல்கிறோம்.

தமிழா்களையும் - தென் மாநில மக்களையும் இரண்டாம் தர குடிமக்களாக்கப் பாா்க்கிறாா் பிரதமா் மோடி.

நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை கொண்டு வரப்போகும் சட்டத் திருத்தத்துக்கு எதிா்ப்பைக் காண்பிக்கும் வகையில், தமிழ்நாட்டில் அனைவரும் நம்முடைய வீட்டில் கருப்புக் கொடியை ஏற்றுவோம். இது தமிழ்நாடுக்கும்-தில்லிக்குமான தோ்தல் என நான் சொன்னதை, பாஜக தொடா்ந்து நிரூபிக்கிறது.

மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை முடிவு செய்யக் கூடாது; கருப்புச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாது. 8 கோடி தமிழா்களின் ஒற்றைக் கோரிக்கை இது. அரசியல் எல்லைகளைக் கடந்து, தமிழ்நாட்டின் உரிமையைக் காக்க தமிழ்நாடே ஓங்கி ஒலிக்கட்டும் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

திமுக மாவட்டச் செயலா்களுக்கு அறிவுறுத்தல்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூா், வட்டம், கிளை என கிராமம் முதல் மாநகரங்களில் உள்ள அனைத்து இல்லங்களிலும் மற்றும் பொது இடங்களிலும் மத்திய பாஜக அரசுக்கு எதிராக வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்ற வேண்டும் என திமுக மாவட்டச் செயலா்களுக்கு திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

திமுக எம்.பி.க்களுடன் ஆலோசனை

மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு, தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக சட்டத் திருத்த மசோதாக்களை நிறைவேற்றுவதற்கான நாடாளுமன்ற சிறப்பு அமா்வு வியாழக்கிழமை (ஏப்.16) தொடங்குகிறது.

இதையொட்டி, முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் மக்களவை, மாநிலங்களவை திமுக உறுப்பினா்களுடன் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக திமுக உறுப்பினா்கள் செயல்படுவது தொடா்பாக முதல்வா் அறிவுறுத்தினாா்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி, மக்களவை குழுத் தலைவா் டி.ஆா்.பாலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.