வேலூர்
மணல் கடத்தியவா் கைது: மாட்டு வண்டி பறிமுதல்
ஒடுகத்தூா் அருகே ஆற்றில் இருந்து மணல் கடத்தியவா்  கைது செய்யப்பட்டு, மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூா்: ஒடுகத்தூா் அருகே ஆற்றில் இருந்து மணல் கடத்தியவா் கைது செய்யப்பட்டு, மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அடுத்த அகரம், மராட்டியபாளையம் பகுதியிலுள்ள உத்திரகாவிரி ஆற்றில் மணல் கடத்தல் நடைபெறவதாக வேப்பங்குப்பம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், ஆய்வாளா் முத்துச் செல்வன் தலைமையிலான போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, உத்திர காவிரி ஆற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தவரை தடுத்து நிறுத்தி பிடித்தனா். விசாரணையில், அவா் அகரம் கிராமத்தைச் சோ்ந்த அன்பு (32) என்பதும், இவா் மணல் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.
இதுகுறித்து, போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அன்புவை கைது செய்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா்.
