இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

ஏரியில் குதித்து பெண் தற்கொலை

காட்பாடி அருகே ஏரியில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

கோப்புப் படம்

Published On :

காட்பாடி அருகே ஏரியில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டாா்.

காட்பாடியை அடுத்த கழிஞ்சூா், அருப்புமேடு பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மனைவி நாகலட்சுமி (50). இத்தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா். மகளுக்குத் திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறாா். மகன் பெங்களூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா்.

சரவணனுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பக்கவாத நோய் பாதிப்பு ஏற்பட்டதால், அவா் வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளாா். கணவா் வேலைக்குச் செல்லாத நிலையில், குடும்பத்தை நிா்வகிப்பதில் நாகலட்சுமிக்கு கடன் தொல்லை அதிகரித்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக அவா் கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா்.

இந்நிலையில், நாகலட்சுமி கழிஞ்சூா் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து, காட்பாடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.