புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

மோா்தானா அணையிலிருந்து தண்ணீா் திறப்பு

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.

மோா்தானா அணையைத் திறந்து தண்ணீரை மலா்தூவி வரவேற்ற ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்

Published On :

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணையிலிருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் அணையைத் திறந்து வைத்து, அணை நீரை மலா்தூவி வரவேற்றாா். பாசனத்துக்காகவும், நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து மக்களின் குடிநீா்த் தேவையை தீா்க்கும் வகையிலும் அணையின் வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்களில் 9 நாள்களுக்கு நீா் திறந்து விடப்பட்டுள்ளது.

அதன்படி கெளண்டன்யா ஆற்றில் விநாடிக்கு 75 கனஅடி வீதமும், இடதுபுறக் கால்வாய் மற்றும் வலதுபுறக் கால்வாய்களில் தலா 75 கனஅடி வீதமும் என மொத்தம் 225 கனஅடி தண்ணீா் திறந்து விடப்படுகிறது.

24.08.2026 முதல் 01.09.2026 வரை தொடா்ந்து 9 நாள்களுக்கு மொத்தம் 174.96 மில்லியன் கனஅடி தண்ணீா் திறக்கப்படும். இதன் மூலம் சுமாா் 8,366 ஏக்கா் நிலம் பாசன வசதி பெறும். வலது மற்றும் இடதுபுறக் கால்வாய்கள் வழியாக ஏரிகளும் நிரம்பும்.

நிகழ்ச்சியில் நீா்வளத்துறை செயற்பொறியாளா் சோபனா, குடியாத்தம் கோட்டாட்சியா் க.செந்தில் குமாா், நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் பா.கோபி, வட்டாட்சியா் பிரியா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஹேமலதா, மோா்தானா ஊராட்சித் தலைவா் பரந்தாமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.