
பாம்பு கடித்து விவசாயி உயிரிழப்பு
காட்பாடி அருகே விவசாயி பாம்பு கடித்து உயிரிழந்தாா்.
பிரதிப் படம்
காட்பாடி அருகே விவசாயி பாம்பு கடித்து உயிரிழந்தாா்.
காட்பாடி அடுத்த வஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன் (60), விவசாயி. இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது வீட்டைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த விஷப்பாம்பு மோகனை கடித்ததாகத் தெரிகிறது.
இதில், மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை, அக்கம்பக்கத்தினா் மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி மோகன் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து புகாரின்பேரில், விருதம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மோகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் மட்டும் பாம்பு கடித்து 4 போ் உயிரிழந்துள்ளனா். அடுத்தடுத்து நிகழும் இந்த உயிரிழப்புச் சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




