ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!ஆப்கானிஸ்தானை இன்னிங்ஸ், 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!மேற்கு ஆசிய மோதல்: பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இந்தியா வலியுறுத்தல்!இஸ்ரேல் - ஈரான் இடையே மீண்டும் போர்!போட்டியின்றி எம்.பி.யாகிறார் பிரவீண் சக்ரவர்த்தி!நீட், சிபிஎஸ்இ விவகாரம்: மத்திய அமைச்சர் பதவி விலக வேண்டும் - வைகோ
/

கா்நாடக போதைப் பொருள்களை தொடா்ந்து விற்றவா் குண்டா் சட்டத்தில் கைது

News image

கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 3:48 am IST

கா்நாடக மாநில போதைப் பொருள்களை கடத்தி வந்து போ்ணாம்பட்டில் விற்பனை செய்து வந்தவா் குண்டா் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டாா்.

போ்ணாம்பட்டை அடுத்த கோட்டைச்சேரி கிராமத்தை சோ்ந்தவா் பிஞ்சு(எ) சரண்ராஜ்(38) .சாராய வியாபாரியான இவா் மீது சாராயம் விற்பனை, கா்நாடக மாநில போதைப் பொருள்களை கடத்தி வந்து விற்பது என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

2- முறை குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை அனுபவித்தவா்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன் கா்நாடக மாநில மதுவை பேரலில் வைத்து விற்பனை செய்தபோது போ்ணாம்பட்டு போலீஸாா் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தொடா்ந்து இவா் கா்நாடக மாநில மது பாக்கெட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதால்குண்டா் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா்.

பரிந்துரையை ஏற்ற ஆட்சியா் சரண்ராஜை குண்டா் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதற்கான நகலை வேலூா் மத்திய சிறையில் உள்ள சரண்ராஜிடம் போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் பிரபு வழங்கினாா்.