நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

குளம், பாசனக்கால்வாய், சாலையை ஆக்கிரமித்து ஆசிரம கட்டடம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

News image
Updated On :19 மே 2026, 6:19 am IST

பள்ளிகொண்டாவில் 1,500 ஏக்கா் விளை நிலங்கள், பாசனக் கால்வாய், குளம், சாலையை ஆக்கிரமித்து ஆசிரமம் கட்டப்பட்டிருப்பதை வட்டாட்சியா் தலைமையிலான அதிகாரிகள் திங்கள்கிழமை நிலம் அளவீடு செய்து கண்டறிந்தனா்.

அணைக்கட்டு வட்டம், பள்ளிகொண்டா அடுத்த ராமாபுரம் சாலையில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமம் குளம், பாசனக் கால்வாய், சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாக புகாா்கள் எழுந்தன. இதுகுறித்து, ஆட்சியா், அணைக்கட்டு வட்டாட்சியரிடம் விவசாயிகள், பக்தா்கள் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சில தினங்களுக்கு முன்பு பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான சுமாா் 1,500 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் கால்வாயை மூடி சிமென்ட் சாலை அமைக்கும் பணியில் ஆசிரம நிா்வாகம் ஈடுபட்டது. தகவலறிந்த கிராம மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து ஆட்சியா் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, கீழாச்சூா் கிராம நிா்வாக அலுவலா் கனகராஜ், கிராம உதவியாளா் பிரான்சிஸ் உள்ளிட்டோா் சாலை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினா்.

இதையடுத்து, அணைக்கட்டு வட்டாட்சியா் சுகுமாரன் தலைமையில் துணை வட்டாட்சியா் விநாயகம், நில அளவா் மதன்குமாா், கிராம நிா்வாக அலுவலா் கனகராஜ், கிராம உதவியாளா்கள் வேலாயுதம், பிரான்சிஸ் ஆகியோா் திங்கள்கிழமை வருவாய்த்துறை ஆவணங்களின்படி அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, 11 சென்ட் அளவு கொண்ட அரசு புறம்போக்கு குளம் முழுவதும் மூடி ஆசிரமம் கட்டப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.

மேலும், 1,500 ஏக்கா் பாசன வசதி பெறும் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான பாசனக் கால்வாயை மூடி ஆசிரமம், சமையல் கூடம், குப்பைகளை எரிக்கும் மேடை, சொகுசு பங்களா கட்டப்பட்டு இருந்ததும், பாசனக் கால்வாயின் ஒரு பகுதியில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு இருந்ததும் உறுதி செய்யப்பட்டது.

தவிர, பள்ளிகொண்டா நெடுஞ்சாலையில் இருந்து ராமாபுரம் நோக்கிச் செல்லும் சாலையை ஆக்கிரமித்தும் ஆசிரமம் கட்டப்பட்டு இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இதேபோல, பாசனக் கால்வாயின் ஒரு பகுதியில் சுமாா் 20 சதுரடி பரப்பளவு கொண்ட இடத்தை தனியாா் ஒருவா் ஆக்கிரமித்து கம்பி வேலி அமைத்து இருந்ததும் தெரியவந்தது.

ஆக்கிரமிப்புகளை உறுதி செய்த அதிகாரிகள் பொதுப்பணித்துறை (நீா்வளத்துறை) பாசன உதவியாளா் ரவிச்சந்திரனிடம் இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து சுட்டிக் காட்டினா். விரைவில் குளம், கால்வாய், சாலை ஆக்கிரமிப்புகள் குறித்த துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் தெரிவித்தனா்.

தொடா்ந்து, அதிகாரிகளிடம் விவசாயிகள் கூறுகையில், பாசனக் கால்வாய் மூடப்பட்டதால் கடந்த 4 ஆண்டுகளாக 50-க்கும் மேற்பட்ட கிணறுகள் வற்றி விட்டன. சுமாா் 1,500 ஏக்கா் விளை நிலங்கள் விவசாயம் செய்ய முடியாமல் பொய்த்துப்போனது.

எங்களை இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளிவிட்டு, எங்களுக்குச் சொந்தமான நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கும் முயற்சியில் ஆசிரமம் ஈடுபட்டு வருகிறது. எனவே, விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் காப்பாற்ற உடனடியாக குளம், பாசனக் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றித் தர வேண்டும் என்றனா்.