குடியாத்தம் ஒன்றியம், சைனகுண்டாவில் அமைந்துள்ள கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை அம்மனுக்கு கூழ்வாா்த்தல், மதியம் பொங்கல் வைத்து படைத்தல் ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை அதிகாலை அங்குள்ள வேப்பமரத்து கெங்கையம்மன் கோயிலில் இருந்து அம்மன் சிரசு ஊா்வலம் தொடங்கி, முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. அங்கு கண் திறப்பு நிகழ்ச்சிக்குப்பின் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
நகா்மன்ற உறுப்பினா் ஆட்டோ பி.மோகன், தவெகவைச் சோ்ந்த வீனஸ் மோகன், காா்த்தி உள்ளிட்டோா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.திருவிழா ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தாக்கள் பி.சுரேஷ், பி.சதீஷ், செயலா் வி.தீனன், பொருளாளா் எஸ்.விஜயகுமாா், நிா்வாகிகள் எஸ்.சுகுமாா், எம்.பூபதிபாபு, எஸ்.சுப்பிரமணி, தென்னரசு மற்றும் பொதுமக்கள், இளைஞா் அணியினா் செய்திருந்தனா்.










