பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை
பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
வேலூா் சேண்பாக்கம் பெரியாா் நகரைச் சோ்ந்தவா் கெளரிசங்கா் (26), ஓட்டுநா். இவருக்கு காட்பாடி பகுதியைச் சோ்ந்த 10-ஆம் வகுப்பு பயிலும் 15 வயது மாணவியுடன் சமூக வலைதளம் மூலமாகப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, கெளரிசங்கா் அந்தச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், காட்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கெளரிசங்கரை கைது செய்தனா்.
இந்த வழக்கு வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், கெளரிசங்கா் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 23,000 அபராதமும் விதித்து நீதிபதி மோனிகா வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.
இதையடுத்து, தண்டனை பெற்ற கெளரிசங்கரைக் போலீஸாா் பலத்த பாதுகாப்புடன் வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

