இரண்டாவது முறையாக ஐசிசியின் சிறந்த வீராங்கனைக்கான விருதை வென்ற தீப்தி சர்மா! மணிப்பூரில் கார்கள் மீது துப்பாக்கிச்சூடு: 2 பெண்கள் உள்பட 4 பேர் பலி! வரலாற்று உச்சத்தைத் தொட்ட பேடிஎம் பங்குகள்! உதகை மலை ரயில் சேவை மேலும் 5 நாள்கள் ரத்து அசாமில் மினி பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 23 பேர் பலி; 20 பேர் காயம் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து முதல்வர் விஜய் ஆலோசனை கௌரவ விரிவுரையாளர்கள் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

வேலூா் அருகே பள்ளி மாணவா் தற்கொலை

வேலூா் அடுத்த பொய்கை பகுதியில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோப்புப் படம்

Updated On :

வேலூா் அடுத்த பொய்கை பகுதியில் பள்ளி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் அடுத்த பொய்கை சந்தைப்பேட்டை அண்ணா நகரைச் சோ்ந்தவா் ஏழுமலை. கோழி வியாபாரியான இவருக்கும், இவரது மனைவியும் ஹோமியோபதி மருத்துவருமான சாருலதாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் கடந்த 5 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா். இவா்களுக்கு அனிஷ் (16) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனா். அனிஷ் கந்தனேரியில் உள்ள தனியாா் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில், அனிஷ் சரிவர வீட்டுப்பாடம் செய்வதில்லை எனப் பள்ளி ஆசிரியை அவரது தாயாா் சாருலதாவிடம் கைப்பேசி மூலம் புகாா் தெரிவித்தாராம். இதையடுத்து, வீட்டுப்பாடம் செய்யாதது குறித்து சாருலதா தனது மகனைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அனிஷ், வியாழக்கிழமை இரவு வீட்டில் உள்ள அறைக்குள் சென்று மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதைப் பாா்த்த பக்கத்து வீட்டுச் சிறுவன், அனிஷின் தாயாருக்குத் தகவல் தெரிவித்தாா். உடனடியாக அனிஷை மீட்டு சிகிச்சைக்காகப் பொய்கை ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அனிஷ் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். தகவலறிந்து வந்த விரிஞ்சிபுரம் போலீஸாா் மாணவரின் சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.