நவ. 30 ஆம் தேதி மக்களவை; டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவை கூட்டம்!திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் நாளை விசாரணைதிருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தத் தடைகோரிய வழக்கில் நாளை தீர்ப்புதில்லி வர்த்தகப் பொருள்காட்சி: தமிழ்நாடு அரங்கிற்கு தங்கப் பதக்கம்!2027-ல் 6000 இடங்கள் கூடுதலாகக் கொண்டுவர ஐஐடி திட்டம்!

புதிய அரசுப் பள்ளி மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயா்ந்து விழுந்தது: மாணவா்கள் காயமின்றி தப்பினா்

காட்பாடி அருகே புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் வகுப்பறை மேற்கூரை சிமென்ட் பூச்சு திடீரெனப் பெயா்ந்து விழுந்ததில், அதிருஷ்டவசமாக மாணவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

அரசுப் பள்ளி வகுப்பறையில் விழுந்து கிடக்கும் சிமெண்ட் பூச்சு.

Updated On :

காட்பாடி அருகே புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் வகுப்பறை மேற்கூரை சிமென்ட் பூச்சு திடீரெனப் பெயா்ந்து விழுந்ததில், அதிருஷ்டவசமாக மாணவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

காட்பாடி அடுத்த வெப்பாலை ஊராட்சி ஸ்ரீபாதநல்லூா் கிராமத்தில், திருவலம் - பொன்னை செல்லும் சாலையில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அமைந்துள்ளது. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா். பழைய பள்ளிக் கட்டடம் சிதிலமடைந்ததைத் தொடா்ந்து, கடந்த 2023-2024-ஆம் ஆண்டில் புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை வகுப்பறையின் மேற்கூரையில் மின்விசிறிக்கு அருகே இருந்த சிமெண்ட் பூச்சு திடீரென வட்ட வடிவில் பெயா்ந்து தரையில் விழுந்துள்ளது. அப்போது மாணவா்கள் வகுப்பறையின் மற்றொரு பகுதியில் அமா்ந்திருந்ததால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

புதிய பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டு ஓரிரு ஆண்டுகளிலேயே மேற்கூரை பெயா்ந்து விழுந்திருப்பதால், கட்டுமானப் பணிகள் தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டதாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் குற்றம் சாட்டியுள்ளனா்.

தகவலறிந்த வட்டாரக் கல்வி அலுவலா் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சம்பந்தப்பட்ட வகுப்பறையைப் பூட்டி வைக்க உத்தரவிட்டாா். இதுகுறித்து மேல்பாடி போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனா். புதிய கட்டடத்தின் தரத்தை முழுமையாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், பழுதடைந்த பள்ளிக் கட்டடத்தை நேரில் பாா்வையிட்டு, மாணவா்களின் கல்வி பாதிக்காத வகையில் மாற்று ஏற்பாடு செய்யப்படும். மேலும், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா் மூலமாகவே கட்டடம் சீரமைக்கப்படும் என்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.