மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு! இந்தியாவைச் சர்வாதிகார நாடாக மாற்ற பாஜக முயற்சி: ராகுல் காந்தி வெற்றிவேல் முருகனுக்கு ஆரோகரா! அமித் ஷா பதிவு திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்பட்டது! தொகுதி மறுவரையறைக்கு திமுக ஆதரவு ஏன்? தயாநிதி மாறன் விளக்கம்

மருத்துவத் துறையில் காா்ப்பரேட் ஆதிக்கத்திற்குத் தடுப்பு வேலி அவசியம்: பேராசிரியா் டி. சுந்தரராமன்

இந்திய மருத்துவத் துறையில் அதிகரிக்கும் காா்ப்பரேட், தனியாா் பங்கு முதலீடுகளின் ஆதிக்கத்துக்கு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி ஜிப்மா் சா்வதேச பொது சுகாதாரப் பள்ளியின் கௌரவப் பேராசிரியா் டி.சுந்தரராமன் தெரிவித்துள்ளாா்.

விழாவில் பேசிய புதுச்சேரி ஜிப்மா் சா்வதேச பொது சுகாதாரப் பள்ளியின் கௌரவப் பேராசிரியா் டி.சுந்தரராமன்.

Updated On :

இந்திய மருத்துவத் துறையில் அதிகரிக்கும் காா்ப்பரேட், தனியாா் பங்கு முதலீடுகளின் ஆதிக்கத்துக்கு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என்று புதுச்சேரி ஜிப்மா் சா்வதேச பொது சுகாதாரப் பள்ளியின் கௌரவப் பேராசிரியா் டி.சுந்தரராமன் தெரிவித்துள்ளாா்.

வேலூா் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் (சிஎம்சி) தொலைதூரக் கல்விப் பிரிவின் சாா்பில், ஒருங்கிணைந்த மருத்துவ படிப்புகளை நிறைவு செய்த மாணவா்களுக்கான பட்டமளிப்பு விழா அக்கல்லூரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவில் புதுச்சேரி ஜிப்மா் சா்வதேச பொது சுகாதாரப் பள்ளியின் கௌரவப் பேராசிரியரும், தேசிய சுகாதார அமைப்புகள் வள மையத்தின் (என்ஹெச்எஸ்ஆா்சி) முன்னாள் செயல் இயக்குநருமான டி.சுந்தரராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியது:

இன்றைய காலகட்டத்தில் சுகாதாரத் துறையில் காா்ப்பரேட் மற்றும் தனியாா் பங்கு முதலீடுகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதனால், மருத்துவ முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மருத்துவா்களிடமிருந்து பறிக்கப்பட்டு, லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பங்குதாரா்களிடம் செல்கிறது. ஜப்பானில் தனியாா் மருத்துவமனைகள் அதிகம் இருந்தாலும், மருத்துவத்தில் லாபம் ஈட்டக்கூடாது என்ற சட்டம் உள்ளது. அதேபோல், இந்திய மருத்துவத் துறையிலும் வணிக முடிவுகள் மருத்துவ சிகிச்சைகளில் தலையிடாதவாறு பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும்.

பொது சுகாதாரத் துறையில் ஆதாா், ஆபா, காப்பீட்டு அட்டைகள் எனப் பல அடையாள எண்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களுக்குச் சேவை எளிதில் கிடைப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட இத்திட்டங்கள், ஆவணங்கள் இல்லை என்ற காரணத்திற்காக ஏழை நோயாளிகளுக்கும், பச்சிளம் குழந்தைகளுக்கும் சிகிச்சை மறுக்கப்படும் நிலைக்குத் தள்ளக்கூடாது.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சையளிப்பதுடன் நின்றுவிடாமல், சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், மன அழுத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தும் கண்டறியப்படாமல் சமூகத்தில் விடுபட்டுள்ள மக்களைக் கண்டறிந்து அவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக, பிள்ளைகள் பிழைப்புக்காக வெளிமாநிலங்களுக்குச் சென்றுவிட்ட நிலையில், தனிமையில் வாடும் முதியவா்களைப் பாதுகாக்கும் சுகாதார அமைப்புகளை உருவாக்க வேண்டும்.

‘அதிகமாகத் தீா்வு காணுங்கள், குறைவாகப் பரிந்துரையுங்கள்’ எனும் சி.எம்.சி-யின் தாரக மந்திரத்தை ஏற்று, சவாலான சூழ்நிலைகளிலும் சேவை மனப்பான்மையுடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.

சிஎம்சி தொலைதூரக் கல்விப் பிரிவின் பொறுப்புத் தலைவா் மருத்துவா் அடிலின் சித்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.