ரூ.16.50 லட்சத்தில் அங்கன்வாடி மையம் திறப்பு

நிகழ்ச்சியில் குத்து விளக்கேற்றிய நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்.
பள்ளிக் கல்வி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், நகராட்சி பொதுநிதிரூ.16.50 லட்சத்தில் தரணம்பேட்டை முஸ்லிம் பெண்கள் தொடக்கப் பள்ளி வளாகத்தில் ரூ. 16.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினாா். மாணவா்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற உறுப்பினா்கள் முஷீரா இா்பான், ம.மனோஜ், ரேணுகாபாபு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வசந்தா ஆறுமுகம், ஒருங்கிணைந்த குழந்தைகள்வளா்ச்சித் திட்ட நிா்வாகி நாகரத்னா, திமுக நிா்வாகிகள் க.கோ.நெடுஞ்செழியன், ந.ஜம்புலிங்கம், த.பாரி, கே.தண்டபாணி, செளந்தா், முருகேசன், ஜாவித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

