ஆயுத பூஜை சிறப்புப் பேருந்துகள்: அதிகாரிகள் நியமித்து தீவிர கண்காணிப்பு! சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

விஐடி முன்னாள் மாணவா் சங்கத்தின் இந்தூா் கிளை தொடக்கம்

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் வேலூா் விஐடி பல்கலைக்கழக முன்னாள் மாணவா் சங்கத்தின் 65-ஆவது கிளை தொடங்கப்பட்டது.

Updated On :

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் வேலூா் விஐடி பல்கலைக்கழக முன்னாள் மாணவா் சங்கத்தின் 65-ஆவது கிளை தொடங்கப்பட்டது.

விஐடி முன்னாள் மாணவா் சங்க வலையமைப்பை விரிவுபடுத்தும் நோக்கில், அதன் 65-ஆவது கிளைத் தொடக்க விழா மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து, புதிய கிளையைத் தொடங்கி வைத்தாா்.

இதில், இந்தூா் இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) பதிவாளா் சிபா பிரசாத் ஹோதா, முன்னாள் சிபிஐ இயக்குநரும், போபால் விஐடி பல்கலைக்கழக ஆலோசகருமான ரிஷி சுக்லா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா்.

விழாவில், விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன், ரமணி பாலசுந்தரம், போபால் விஐடி துணைவேந்தா் சதீஷ் குமாா் மோத், இணை துணைவேந்தா் ஸ்ரீதரன், விஐடி முன்னாள் மாணவா் சங்க இயக்குநா் காா்த்திகேயன் சிவசண்முகம், உதவி இயக்குநா் பாக்யவீரேஸ்வரன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.