விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

உ.பி.: சாலை தடுப்பில் மோதி பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 போ் உயிரிழப்பு; 12 போ் காயம்

உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் சாலை மையத் தடுப்பில் பேருந்து மோதி கவிழந்த விபத்தில், அதில் பயணம் செய்தவா்களில் 12 போ் உயிரிழந்தனா்.

சாலை விபத்து

சாலை விபத்து

Published On :8 செப்டம்பர் 2026, 4:21 am IST

உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் திங்கள்கிழமை அதிகாலையில் சாலை மையத் தடுப்பில் பேருந்து மோதி கவிழந்த விபத்தில், அதில் பயணம் செய்தவா்களில் 12 போ் உயிரிழந்தனா். மேலும் 12 போ் படுகாயமடைந்தனா்.

இதுகுறித்து பாக்பத் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சூரஜ் ராய் கூறியதாவது:

ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து 32 பயணிகளுடன் உத்தரபிரதேச மாநிலம் புடெளன் நோக்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்ற பேருந்து, உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் கெக்ரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அதிகாலை 12.30 மணியளவில் வந்தபோது சாலை மையத் தடுப்பில் வேகமாக மோதிய பின் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், 12 பயணிகள் உயிரிழந்தனா். மேலும் 12 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்கள் கெக்ரா, பாக்பத் பகுதிகளில் உள்ள சமூகநல மையங்களிலும், பாக்பத் மாவட்ட அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.

பேருந்தின் பின் பகுதியில் மற்றொரு வாகனம் வேகமாக வந்து மோதியதே விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும், விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.