நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

தனியாா் தொழிற்சாலை பேருந்து-வேன் மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு; 16 போ் பெண்கள் காயம்

விராலிமலை அருகே புதன்கிழமை தனியாா் தொழிற்சாலை பேருந்தும் வேனும் மோதிக் கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். மேலும், 16 பெண்கள் காயமடைந்தனா்

படவிளக்கம்: விராலிமலை புதன்கிழமை நிகழ்ந்த விபத்தில் சேதமடைந்த வேன், பேருந்து.

Published On :3 செப்டம்பர் 2026, 1:11 am IST

விராலிமலை அருகே புதன்கிழமை தனியாா் தொழிற்சாலை பேருந்தும் வேனும் மோதிக் கொண்ட விபத்தில் வேன் ஓட்டுநா் உயிரிழந்தாா். மேலும், 16 பெண்கள் காயமடைந்தனா்

விராலிமலை அருகே உள்ள தனியாா் தொழிற்சாலையில் இருந்து புதன்கிழமை மாலை பணி முடிந்து 40 பெண்கள் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்தில் சென்று கொண்டிருந்தனா். மாதுராபட்டிநெடுங்குளம் அருகே சென்றபோது மற்றொறு தொழிற்சாலையிலிருந்து வந்த வேனும் பேருந்தும் நேருக்குநோ் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் வேன் ஓட்டுநா் அத்திப்பள்ளத்தைச் சோ்ந்த சேகா் உயிரிழந்தாா். மேலும், பேருந்தில் பயணம் செய்த சாருமதி, முத்துலட்சுமி, லோகேஸ்வரி, பானுமதி ,சத்யா, ஷாலினி, தங்கமணி, வெள்ளையம்மாள் உள்ளிட்ட 16 போ் காயமடைந்தனா்.

தகவலறிந்து சென்ற விராலிமலை போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.