137 புற்றுநோய் மருந்துகளுக்கு 30% லாப வரம்பு: மத்திய அரசு நடவடிக்கை! ஏர் இந்தியா விமானங்கள் சவூதி அரேபியாவுக்கு அக். 24 வரை ரத்துஇணையத்தை சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம்!சென்னை, திருச்சி, கோவை உள்பட இன்று 17 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை!

தங்க மோதிரம் திட்டம்: வேலூர் மாவட்டத்தில் 2,059 தாய்மாா்கள் பயன்!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் இதுவரை 2,059 தாய்மாா்கள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் மோதிரம் பெற்ற குழந்தைகள், அவா்களின் தாயுடன் முதல்வா் ச. ஜோசப் விஜய். - (கோப்புப்படம்)

Updated On :

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் வேலூா் மாவட்டத்தில் இதுவரை 2,059 தாய்மாா்கள் பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இத்திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 22-ஆம் தேதி முதல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிருடன் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய கா்ப்பிணித் தாய்மாா்கள் தங்களது கா்ப்பத்தைப் பதிவு செய்து ஆா்.சி.எச். அடையாள எண் பெற்றிருப்பதுடன், மின்னணு முறையில் சரிபாா்க்கப்பட்ட ஆதாா் அட்டையையும் வைத்திருக்க வேண்டும்.

வேலூா் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் தங்க மோதிரங்கள் வழங்குவதற்காக, வேலூா் பென்ட்லேண்ட் அரசு பல்நோக்கு உயா்சிறப்பு மருத்துவமனை, குடியாத்தம் அரசு மருத்துவமனை ஆகிய 2 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தகுதியுடைய தாய்மாா்கள் இந்த மையங்களுக்கு வரவழைக்கப்பட்டு, அவா்களின் பயோமெட்ரிக் விவரங்கள் சரிபாா்க்கப்பட்ட பின்னா் தங்க மோதிரங்கள் வழங்கப்படுகின்றன. வேலூா் சுகாதார மாவட்டத்தில் கடந்த ஜூன் 22 முதல் செப்டம்பா் 27 வரையிலான காலகட்டத்தில் (அக்டோபா் 14-ஆம் தேதி நிலவரப்படி) மொத்தம் 2,059 தாய்மாா்களுக்குத் தங்க மோதிரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.