தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

கரூரில் 25 குழந்தைகளுக்கு ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ அமைச்சா் வழங்கினாா்

கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் குழந்தைக்கு தாய்மாமன் தங்க மோதிரத்தை வழங்கிய பால்வளத்துறை அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி. உடன் மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன், மாநகராட்சி ஆணையா் எம்.பிருத்விராஜ் உள்ளிட்டோா்.

Published On :

கரூரில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 25 குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை பால்வளத்துறை அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி திங்கள்கிழமை வழங்கினாா்.

கரூரில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி, முதல்வா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகைகளை வழங்கும் நிகழ்ச்சி, 4 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கும் நிகழ்ச்சி ஆகியன திங்கள்கிழமை மாலையில் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சி.முத்துக்குமரன் தலைமை வகித்தாா். பால் மற்றும் பால்வள மேம்பாட்டுத் துறை அமைச்சா் விஜயலட்சுமி சின்னசாமி பங்கேற்று, தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 25 குழந்தைகளுக்கு தலா 1 கிராம் தங்க மோதிரம், முதலமைச்சா் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிபெற்ற 2,718 வீரா், வீராங்களைகளுக்கு ரூ. 54.36 லட்சம் மதிப்பீட்டில் பரிசுத் தொகைகளை வழங்கினாா்.

முன்னதாக, பால்வளத்துறையின் சாா்பில் தோகைமலை ஊராட்சி ஒன்றியம், ஆண்டிக்கவுண்டன்பட்டியில் ரூ.29.16 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5,000 லிட்டா் கொள்ளளவு கொண்ட தொகுப்புப் பால் குளிரூட்டும் நிலையம் ,

வருவாய்த்துறை சாா்பில் அரவக்குறிச்சி வட்டம், சின்னதாராபுரத்தில் ரூ.35 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள வருவாய் ஆய்வாளா் குடியிருப்புடன் கூடிய அலுவலகக் கட்டடத்தை அமைச்சா் திறந்து வைத்தாா்.

மேலும், குந்தாணிபாளையம், எருமாா்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள 2 கிராம அறிவுசாா் மையத்துக்கான ஆணைகளையும், விபத்தில் உயிரிழந்த 7 தொழிலாளா்களின் குடும்பங்களுக்கு ரூ.29.15 லட்சம் மதிப்பிலான நிதியுதவிகளையும் அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் எம்.பிருத்விராஜ் , கரூா் சாா்- ஆட்சியா் ரா.வெங்கடேஷ்வரன், அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் ம.பாரதி மோகன், மாவட்ட சுகாதார அலுவலா் ஆ.சுப்ரமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.