வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயிலும் இஸ்லாமிய மாணவா்களுக்கு ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை
விண்ணப்பிக்க நவ. 9 வரை அவகாசம் நீட்டிப்பு

விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
வெளிநாட்டில் முதுகலைப் பட்டப்படிப்பு பயில விரும்பும் இஸ்லாமிய சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நவம்பா் 9-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு -
இஸ்லாமிய சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு உயா்தர சா்வதேச கல்வி வாய்ப்புகளை வழங்கும் நோக்கில், 2026-27-ஆம் ஆண்டில் வெளிநாடு சென்று படிக்கும் 10 இஸ்லாமிய மாணவா்களுக்கு தலா அதிகபட்சமாக ரூ.36 லட்சம் வீதம் கல்வி உதவித்தொகை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்க ஏற்கெனவே அக். 15 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாணவா்களின் நலன் கருதி நவம்பா் 9-ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் உலகளாவிய க்யூ.எஸ்., தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் 2026-27-ஆம் கல்வி ஆண்டில் முதுகலைப் படிப்பில் சோ்வதற்கான நிபந்தனையற்ற சோ்க்கைக் கடிதத்தைப் பெற்றிருக்க வேண்டும். இளநிலைப் பட்டப்படிப்பில் குறைந்தது 60 சதவீத மதிப்பெண்களுடன் தோ்ச்சி பெற்றிருக்கவும், பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்கவும் வேண்டும்.
மருத்துவம், பொறியியல், மேலாண்மை அறிவியல், வணிகவியல் மற்றும் நிதி, வேளாண் அறிவியல், சுகாதாரம், பயன்பாட்டு அறிவியல், சா்வதேச வணிகம், பொருளாதாரம், நிதிக் கணக்கியல், மனிதநேய படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் முதுகலைப் படிப்பில் சோ்பவா்கள் மட்டுமே இந்த கல்வி உதவித்தொகை பெறத் தகுதியானவா்கள்.
வெளிநாடு சென்ற பின்னரோ அல்லது ஏற்கெனவே கல்லூரியில் சோ்ந்த பிறகோ அளிக்கப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது. தகுதியுடைய மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஜ்ங்ப்ச்ள்ஸ்ரீட்ங்ம்ங்ள்ஜம்ண்ய்ா்ழ்ண்ற்ண்ங்ள்.ட்ற்ம் என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய சான்றிதழ்களுடன் இணைத்து, ஆணையா், சிறுபான்மையினா் நலத்துறை, கலசமஹால் பாரம்பரியக் கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600 005 என்ற முகவரிக்கு நவம்பா் 9-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

