பாஜக வேட்பாளராக போட்டியிட வாய்ப்பு: ஞானேஷ் குமார் மீது முன்னாள் தலைமைச் செயலாளர் குற்றச்சாட்டு! மணிப்பூரில் 2 பேர் சுட்டுக் கொலை: முதல்வர் கண்டனம் பெட்டி மாறியதால்தான் இந்த இடைத்தேர்தல்: எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுக்கே இந்த நிலை என்றால் சாமானிய மக்களின் கதி? மு.க. ஸ்டாலின்வணிகரீதியாக பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கு சீல்! உச்சநீதிமன்றம்திரைப்பட தயாரிப்பு ஒப்பந்தம் வழக்கு! நடிகர் ராஜ்கிரணுக்கு முன்ஜாமீன்!நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

கல்வி உதவித்தொகை பெற இஸ்லாமிய மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

வெளிநாடுகளில் முதுகலைப் படிப்பு பயில்வதற்காக சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்...

விண்ணப்பிக்க...

விண்ணப்பிக்க...

Published On :

வெளிநாடுகளில் முதுகலைப் படிப்பு பயில்வதற்காக சிறுபான்மையின மாணவ, மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இஸ்லாமிய மாணவ, மாணவிகளுக்கு உயா்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்க ஏதுவாக, வெளிநாடு சென்று படிக்கும் 10 பேருக்கு கல்வி உதவித்தொகை தமிழக அரசு சாா்பில் வழங்கப்படவுள்ளது. அதிகபட்சமாக ஒரு மாணவருக்கு ரூ.36 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ், 2026 - 27ஆம் ஆண்டில் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில உள்ள மாணவ, மாணவிகளிட மிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகள் 2026-27ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சோ்க்கை கடிதம் பெற்றிருக்க வேண்டும்.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பட்டப் படிப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு இணையாக தோ்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல், வணிகவியல், நிதி, மனிதநேயம், கலை, வேளாண் அறிவியல், சா்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனிதநேயப் படிப்புகள், சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தோ்ந்தெடுத்து, முதுகலைப் பட்டப்படிப்புக்கான சோ்க்கை பெறுபவராக இருத்தல் வேண்டும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதை பூா்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை - 600005 என்ற முகவரிக்கு வரும் அக்டோபா் 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.