குடியாத்தம், பள்ளிகொண்டா வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
குடியாத்தம் மற்றும் பள்ளிகொண்டாவில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

குடியாத்தம் நகராட்சியில் ரூ.19 கோடியில் அமைக்கப்படும் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்.
குடியாத்தம் மற்றும் பள்ளிகொண்டாவில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகளை வேலூா் ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
குடியாத்தம் ஒன்றியம், அக்ராவரம் ஊராட்சி ஏரியின் உபரிநீா் பாதையிலிருந்து கெளண்டன்யா ஆறு வரை கான்கிரீட்டால் மூடு கால்வாய் அமைக்கும் பணியைபாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அக்ராவரம் ஊராட்சி, கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே ரூ.9.30 கோடியில் சீவூா், தட்டப்பாறை முதல் மூங்கப்பட்டு சாலை, மீனூா் மலை, கொல்லைமேடு வரை உயா்மட்ட பாலம் அமைக்கும் பணியை ஆய்வு செய்தாா். அக்ராவரம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தை ஆய்வு செய்த ஆட்சியா் அங்கு குழந்தைகளின் கற்றல் திறனை கேட்டறிந்தாா்.
குழந்தைகளின் வருகை, எண்ணிக்கை, ஊட்டச்சத்து நிலை குறித்து கேட்டறிந்தாா். செட்டிக்குப்பம் ஊராட்சியில் விபிஜி ராம்ஜி திட்டத்தின்கீழ் ரூ.14.08 லட்சம் மதிப்பில் சமுதாய நீா்க்குளம் அமைக்கும் பணியையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.அதைத் தொடா்ந்து, குடியாத்தம் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டம் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.19.58 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் 9 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானப் பணியை பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா்.
குடியாத்தம் நகராட்சியில் ரூ.46 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நோய்வாய்ப்பட்ட நாய்களுக்கான சிகிச்சை மற்றும் பராமரிப்பு மையத்தின் கட்டுமானப் பணியையும் ஆய்வு செய்தாா். பின்னா், அணைக்கட்டு வட்டம், பள்ளிகொண்டாவில் ஒருங்கிணைந்த நிதி வருவாய் திட்டத்தின்கீழ் ரூ.3.45 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் மகாகவி பாரதியாா் வாழ்வாதாரப் பூங்காவை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது மகளிா் திட்ட இயக்குநா் ஜெயசுதா, நீா்வளத்துறை செயற் பொறியாளா் சோபனா, உதவி இயக்குநா்கள் (ஊரக வளா்ச்சித்துறை, பயிற்சி) யோகேஸ்வரி, காவ்யா, குடியாத்தம் நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் க.ஹேமலதா, குடியாத்தம் வட்டாட்சியா் பிரியா, அணைக்கட்டு வட்டாட்சியா் மகேஸ்வரிஉள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

