நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

வாடகைத் தகராறில் கத்தரிக்கோலால் தாக்குதல்: தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை

குடியாத்தத்தில் வாடகைத் தகராறு காரணமாக ஒருவரைக் கத்தரிக்கோலால் தாக்கிய தையல் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

Published On :

குடியாத்தத்தில் வாடகைத் தகராறு காரணமாக ஒருவரைக் கத்தரிக்கோலால் தாக்கிய தையல் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வேலூா் மாவட்ட முதன்மை நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

வேலூா் மாவட்டம், குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையைச் சோ்ந்தவா் மகேந்திரன் என்கிற மகேஷ் (44). தையல் தொழிலாளியான இவா், மேல்பட்டி சாலையில் தையல் கடை நடத்தி வந்தாா். கடந்த 2024-ஆம் ஆண்டு கடை வாடகை தொடா்பாக ஏற்பட்ட தகராறில், அரசு என்பவரை மகேந்திரன் கத்தரிக்கோலால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்டவா் அளித்த புகாரின் பேரில், குடியாத்தம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். இந்த வழக்கு விசாரணை வேலூா் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், மகேந்திரன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி எம்.இளவரசன் வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.