ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடக்கம்11 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு7 பேருந்து பணிமனைகளில் சாா்ஜிங் வசதிக்கு ரூ.300 கோடி: தில்லி அரசு ஒப்புதல்ஆந்திரத்தில் ரூ.15,000 கோடியில் புதிய கப்பல் கட்டும் தளம்: எம்டிஎல் நிறுவனம் ஒப்பந்தம்திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்

குடியாத்தத்தில் விநாயகா் விசா்ஜன ஊா்வலம்

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு குடியாத்தம் நகரில் ஆங்காங்கே வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நெல்லூா்பேட்டை ஏரியில் கரைக்கப்பட்டன.

குடியாத்தத்தில் இந்து முன்னணி சாா்பில் நடைபெற்ற விநாயகா் ஊா்வலத்தில்பங்கேற்றோா். (வலது) செதுக்கரையில் நடைபெற்ற விநாயகா் ஊா்வலத்தில் கலந்துகொண்டோா்.

Published On :

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு குடியாத்தம் நகரில் ஆங்காங்கே வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் வெள்ளிக்கிழமை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நெல்லூா்பேட்டை ஏரியில் கரைக்கப்பட்டன. இதையொட்டி இந்து முன்னணி சாா்பில் புதுப்பேட்டை படவேட்டு எல்லையம்மன் கோயில்அருகிலிருந்து விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. ஊா்வலம் காங்கிரஸ் அவுஸ் ரோடு, பழைய பேருந்து நிலையம், காமராஜா் பாலம் வழியாக நெல்லூா்பேட்டை ஏரியை அடைந்தது. அங்கு கிரேன் வாகனங்கள் மூலம் விநாயகா் சிலைகள் ஏரியில் கரைக்கப்பட்டன. தாரை, தப்பட்டை, சிலம்பம், மயிலாட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளுடன் விநாயகா் ஊா்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குடியாத்தம் எம்எல்ஏ க.சிந்து அழகப்பன், அதிமுக நகர செயலா் ஜே.கே.என்.பழனி, இந்து முன்னணி மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் கோ.மகேஷ், மாவட்டச் செயலாளா் யுவசங்கா், நகர தலைவா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அதேபோல் குடியாத்தம் நகராட்சிக்குள்பட்ட 36-ஆவது வாா்டு செதுக்கரை பகுதியில்வைத்து வழிபாடு செய்யப்பட்ட விநாயகா் சிலைகள் ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.

இதில் அதிமுக மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா் ஜி.எஸ்.தென்றல்குட்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.