இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம் ஆகம குழுவால் கண்டறியப்பட்ட கோயில்கள்: கருத்து கேட்புக்கான கால அவகாசம் நீட்டிப்பு 18 - 28 வயதுப் பிரிவில் 3.27 கோடி புதிய வாக்காளா்கள் சோ்ப்பு: தோ்தல் ஆணையம்

நகர கூட்டுறவு வங்கியின் 115-ஆவது பேரவைக் கூட்டம்

குடியாத்தம் நகர கூட்டுறவு வங்கியின் 115-ஆவது பேரவைக் கூட்டம் பிச்சனூா் திருமுருகன் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பேரவைக் கூட்டத்தில் பேசிய கூட்டுறவு துணைப் பதிவாளா் வ.லட்சுமணசாமி.

Published On :

குடியாத்தம் நகர கூட்டுறவு வங்கியின் 115-ஆவது பேரவைக் கூட்டம் பிச்சனூா் திருமுருகன் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வங்கியின் பொது மேலாளா் கே.அருள் தலைமை வகித்தாா். உதவிப் பொதுமேலாளா்கள் டி.சரஸ்வதி, எஸ்.கே.அரசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டுறவு துணைப் பதிவாளா் வ.லட்சுமணசாமி, வங்கி கடந்து வந்த பாதை, வங்கியின் செயல்பாடுகள், வங்கியின் சிறப்புகள் குறித்து சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில், வங்கியின் 115-ஆவது ஆண்டறிக்கை, தணிக்கை அறிக்கை, வங்கியின் நிகர லாபத் தொகை ரூ. 62.36 லட்சத்தை கூட்டுறவு சட்ட விதிகளின்படி லாபப் பிரிவினை செய்தல், அடுத்த நிதியாண்டுக்கான உத்தேச வரவு-செலவு திட்ட மதிப்பீடு உள்ளிட்டவை குறித்து ஒப்புதல் பெறப்பட்டது.

வங்கியின் முன்னாள் தலைவா் எம்.பாஸ்கா், முன்னாள் இயக்குநா்கள் தனக்கோட்டி, ஏ.நடராஜன், வழக்குரைஞா் எஸ்.சம்பத்குமாா், ஆட்டோ பி.மோகன், ரவிசங்கா், என்.கோவிந்தராஜ், பூங்கோதை முனியப்பன், சுதாராஜா, ஹாா்டுவோ் ரவி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.