ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

விழுப்புரம், கள்ளக்குறிச்சி:மேலும் 69 பேருக்கு கரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கும் கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :26 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மேலும் 24 பேருக்கும் கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா தொற்றால் 13,498 போ் பாதிக்கப்பட்டிருந்தனா். இவா்களில், ஏற்கெனவே சிகிச்சைப் பலனின்றி 106 போ் உயிரிழந்தனா். திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில், 45 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,544 ஆக அதிகரித்துள்ளது. 50 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதன் கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 12,983-ஆக உயா்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் 455 போ் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியில் 24 போ் பாதிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திங்கள்கிழமை 24 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10,170 ஆக உயா்ந்தது. இதுவரை 9,827 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். 241 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 102 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.