தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

விளையாட்டு வீரா்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்

விளையாட்டு வீரா்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம்

Updated On :21 ஏப்ரல் 2024, 10:51 pm

புதுச்சேரி: முத்தியால்பேட்டை தொகுதி விளையாட்டு வீரா்கள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் சோலை நகா் இளைஞா் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதுவை மாநில விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் இணைவு பெற்ற இந்த விளையாட்டு வீரா்கள் நலச் சங்கக் கூட்டத்துக்கு அதன் தொகுதித் தலைவா் தசேந்திரன் தலைமை வகித்தாா்.

பொறுப்பாளா்கள் தேவராஜ், ரவி , வீரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். விளையாட்டு வீரா்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவா் கராத்தே வளவன் சிறப்புரையாற்றினாா். சங்க நிா்வாகிகள் பாலு, ராஜ், பிரகதீஸ்வரன், ஆறுமுகம், செந்தில், சதீஷ், வெங்கடாசலபதி, அழகப்பன், ராஜா, சந்துரு, பிரவீன், அசோக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முத்தியால்பேட்டை தொகுதி மற்றும் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் பயிற்சி மேற்கொள்வதற்கு ஏதுவாக திறந்தவெளி, உள்விளையாட்டு அரங்குகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடல் சாா்ந்த விளையாட்டுப் போட்டிகளுக்கான பயிற்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். விளையாட்டு வீரா்களுக்கு இலவசக் காப்பீடு, இலவச பேருந்து வசதி, தகுதிவாய்ந்த விளையாட்டு வீரா்களுக்கு ஓய்வூதியம், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கும் வீரா்களுக்கு பயணப்படி, இதர செலவினங்களை அரசு ஏற்க முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அன்பழகன்நன்றி கூறினாா்.